Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்கும் அன்னா ஹசாரே

In இந்தியா
Updated: 08:14 GMT, Jan 6, 2018 | Published: 08:14 GMT, Jan 6, 2018 |
0 Comments
1270
This post was written by : Varothayan

வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் மார்ச் 23 முதல் தலைநகர் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்திவரும் அவர், கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய அன்னா ஹசாரே, ஆசிய கண்டத்தில் ஊழலில் முதல் நாடாக இந்தியாவை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் கடந்த 22 ஆண்டுகளில் 12 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், அன்றாடம் இருவேளை உணவு கிடைப்பதற்காக விவசாயிகள் அவதிப்படுகின்றனர். 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் ஓய்வூதிய மசோதா பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

வலுவான லோக்பால் மசோதா தொடர்பாகவும், விவசாயிகளின் நலன்களை முன்வைத்தும், தேர்தல் சட்டத்தை சீர்திருத்தவும் மாவீரர்கள் தினமான வரும் 23 ஆம் திகதி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, தொடர்ந்து போராடுவேன்.

நான் கைது செய்யப்பட்டால் சிறையிலும் எனது போராட்டத்தை தொடருவேன். இந்த முறை நான் எதிர்பார்ப்பது போல் அரசு தரப்பில் இருந்து சரியான விடை கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் – என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg