Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு மாத்திரமே அழைப்பு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு

In இலங்கை
Updated: 08:34 GMT, Jan 6, 2018 | Published: 08:30 GMT, Jan 6, 2018 |
0 Comments
1353
This post was written by : Risha

இந்தியாவில் நடைபெறவுள்ள வெளிநாடு வாழ் இந்தியர் தின நிகழ்வுகளில் பங்கேற்க சார்க் உறுப்பு நாடுகளில் இலங்கைக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில், பிரித்தானியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 23 நாடுகளை சேர்ந்த வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தில். இந்திய வம்சாவழியினருக்கான நாடாளுமன்ற மாநாடொன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்ப உரையாற்றவுள்ளார்.

மகாத்மா காந்தி, தென்னாபிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளான ஜனவரி 9ஆம் திகதி, இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg