Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: எடப்பாடியுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

In இந்தியா
Published: 09:17 GMT, Jan 6, 2018 |
0 Comments
1067
icon_com
This post was written by : Varothayan
Stalin edapadi

தமிழக அரச போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

இதன் போது, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஊழியர்கள் பணிக்குத் திரும்பாமல் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளர்.

நாளைக்குள் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். எனவே, நாளை பணிக்கு திரும்பாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)