Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு முன்னாள் பிரதமர் வலியுறுத்து

In
Updated: 09:07 GMT, Jan 6, 2018 | Published: 09:07 GMT, Jan 6, 2018 |
0 Comments
1199
This post was written by : Suganthini

பிரெக்சிற் தொடர்பாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வலியுறுத்தியுள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவேண்டிய உரிமையை பிரித்தானிய மக்கள் கொண்டுள்ளனர்.எனவே, பிரெக்சிற் தொடர்பாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

மேலும், ‘பிரெக்சிற் தொடர்பாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு நான் விடுக்கும் கோரிக்கைக்கு தொழிற்கட்சித் தலைமை ஆதரவளிக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளால் பிரித்தானியாவின் முன்னேற்றகரமான நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg