Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் சுற்றிய மோடி உள்ளுரைச் சுற்ற ஆயத்தமாகிறார்!

In இந்தியா
Published: 09:32 GMT, Jan 6, 2018 |
0 Comments
1154
icon_com
This post was written by : Varothayan
Narendra Modi

இந்தியாவில் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை அவதானிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி அம்பேத்கார் பிறந்த தினத்தன்று மோடியின் சுற்றுப்பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த அம்பேத்கார் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு மோடி பேசும் போது இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தியா முழுவதும் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்றது. இதில், 115 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அந்த 115 மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகளை அமுல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சுகாதாரம், குடிநீர், கல்வி போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த மோடி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த 115 மாவட்டங்களிலும் தொழில் விவசாயம் சார்ந்த பணிகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவர மோடி உத்தரவிட்டுள்ளார். இது தவிர நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோடி உள்நாட்டில் சுற்றி நாட்டின் நிலைமைகளைக் கண்டறிவதை விட உலகம் சுற்றுவதையே பொழுதுபோக்காக கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் பெருமளவில் எழுந்துள்ள நிலையில், இந்த உள்ளுர் பயணம் ஆரம்பமாகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)