Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம்: பிரஸ்ஸல்ஸில் சந்திப்பு!

In
Updated: 09:39 GMT, Jan 6, 2018 | Published: 09:39 GMT, Jan 6, 2018 |
0 Comments
1206
This post was written by : Suganthini

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரதான பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியரை, பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் நைஜல் ஃபராஜ் (Nigel Farage) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இந்தச் சந்திப்பு பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரதான பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியரைச் சந்திப்பதற்கு கடந்த ஒக்டோபரில் நைஜல் ஃபராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளுக்கமைய மேற்படி இருவருக்குமிடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, இரண்டாம் கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தையை இம்மாதம் நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg