Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் பிழைப்புக்காக வட – கிழக்கு இணைப்பை பேசவேண்டிய தேவையில்லை: ரவூப் ஹக்கீம்

In இலங்கை
Published: 09:59 GMT, Jan 6, 2018 |
0 Comments
1222
This post was written by : Ravivarman
01

சமகாலத்தில் நடக்கமுடியாத ஒரு விடயத்துக்காக தமிழர்களின் அபிலாஷையில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும்வகையில், நிந்தவூரில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’அரசியல் பிழைப்புக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போகிறது என்று பிரசாரம் செய்துவருகின்றனர். வடக்கையும், கிழக்கை இணைப்பதற்கு நான் இரகசியமாக ஒப்பந்தம் செய்ததுபோல பேசிக்கொண்டு திரிகின்றனர்.

இவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிய வந்த முன்னாள் செயலாளர் இப்போது பல்டி அடித்துக்கொண்டு இப்படி பேசித்திரிகின்றார். இந்தக் காலகட்டத்தில் நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி பேசுவதில் எந்த நியாயம் இருக்கிறது.

அரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச போன்றோர் வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசலாம். அவர்களைப் போல, இவர்களையும் இதை வைத்துத்தான் அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற நிலைக்கு அவர்களது ஆதரவுத்தளம் இருக்கிறது.

வட – கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மு.கா. பகிரங்கமாக எதையும் பேசப்போவதில்லை. அப்படியொரு விடயம் நடந்தால் நாங்கள் அதைப்பற்றிப் பேசுவோம்.

எங்களது அரசியலுக்காக தமிழர்களின் அபிலாஷைகளில் மண் அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் அமையாமல் இது எதுவும் நடக்கப்போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளை நாங்கள் ஒருபோதும் அடகுவைக்கப் போவதில்லை’ என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)