Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் இல்லம் விரைவில் நினைவிடமாக்கப்படும்: அன்புச்செல்வன்

In இந்தியா
Updated: 10:09 GMT, Jan 6, 2018 | Published: 10:09 GMT, Jan 6, 2018 |
0 Comments
1182
This post was written by : Varothayan

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நான்கு மாதங்களில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலித்தாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாமையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திததி உயிரிழந்ததை அடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வீடு முழுவதையும்; மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது ஜெயலலிதா வாழ்ந்த வீடு நான்கு மாதங்களில் நினைவு இல்லமாக்கப்படும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg