Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் வீசிய பனிப்புயலால் பொருளாதாரத்தில் பாதிப்பு

In
Published: 10:18 GMT, Jan 6, 2018 |
0 Comments
1125
This post was written by : Suganthini

அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் கடந்த வாரம் வீசிய பனிப்புயல் காரணமாக, அந்நாட்டின் பொருளாதாரத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் கடந்த வியாழக்கிழமை பனிப்புயல் வீசியதுடன், கடும் குளிராலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு சுமார் 5 ஆயிரம் விமானப் போக்குவரத்துச் சேவைகள் ரயில் சேவைகளும் தடைப்பட்டன. அத்துடன், 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டன.

மேலும், பலர் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமையும் காணப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, , அந்த ஊடகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg