Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டி வில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தியமை மகிழ்ச்சியளிக்கிறது: புவனேஸ்வர் குமார்

In கிாிக்கட்
Updated: 10:31 GMT, Jan 6, 2018 | Published: 10:30 GMT, Jan 6, 2018 |
0 Comments
1234
This post was written by : Elakkiya
ml

உலகின் சிறந்த வீரர் டி வில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தியமை மகிழ்ச்சியளிப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) கேப்டவுனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் முதலாவது இன்னிங்ஸில் டிவில்லியர்ஸ் உட்பட தென் அபிரிக்க அணியின் நான்கு விக்கெட்களை புவனேஸ்வர் குமார் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் போட்டிக்கு பின்னரான செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த புவனேஸ்வர் குமார், “போட்டியை சிறப்பாக ஆரம்பித்தோம். இதுபோன்ற ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர். அவர் எங்கள் பந்துவீச்சுக்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடுகிறார். ஆனாலும் அவருடைய விக்கெட்டை வீழ்த்தியமை மகிழ்ச்சியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg