Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார்: துரைராசசிங்கம்!

In இலங்கை
Updated: 16:20 GMT, Jan 6, 2018 | Published: 10:21 GMT, Jan 6, 2018 |
0 Comments
1302
This post was written by : Ravivarman
thurai mini

விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல என்றாலும், ஐவரில் ஒருவன், இல்லையென்றால் ஏகலைவன்’ என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கற்தூணாய் நெருங்குவோமன்றி, காலமறிந்து செயற்படோம்’ என்றிருப்பது தமிழர் தம் தலைவிதியாக மாறிவிடக் கூடாது என்பது என் எண்ணம்.

ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தவறவிடாது தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்.

துரோணாச்சாரியார் விஸ்வாமித்திரராக விஸ்வரூபம் எடுக்கின்றார். நான் கொக்கு அல்ல. எனினும் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் உள்ளபடியே இருக்கும்.

இனிமேல் இது பற்றி நான் தொட மாட்டேன். தொடங்கியவரே முடிப்பவரும் ஆவார் என்ற மரபுப்படி ஐயா அவர்கள் முடித்து வைப்பதாயினும் சரி, அது அவர் திருவுளம்’ என அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg