Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாகியது

In இந்தியா
Updated: 10:24 GMT, Jan 6, 2018 | Published: 10:24 GMT, Jan 6, 2018 |
0 Comments
1255
This post was written by : Varothayan

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்ட ‘ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ தற்போது ‘மக்கள் மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, விரைவில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிரடியான சில சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் அவர், தனது ரசிகர் மன்றங்களையும் அரசியல் நடவடிக்கைகள் குறித்த நகர்வுகளுக்காக தயாராக்கி கொண்டு வருகிறார்.

தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அண்மையில் அறிமுகப்படுத்தினார்.

அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில், ரஜினியின் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தற்போது ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg