Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூபெக் தாக்குதல் நினைவு தினத்தை அதிகாரபூர்வ நாளாக அறிவிக்க முஸ்லிம் குழுக்கள் கோரிக்கை

In கனடா
Updated: 11:11 GMT, Jan 6, 2018 | Published: 11:10 GMT, Jan 6, 2018 |
0 Comments
1076
This post was written by : Elakkiya

கியூபெக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் ஆண்டு நிறைவை அதிகாரபூர்வ நினைவுதினமாக அறிவிக்க வேண்டும் என கனேடிய முஸ்லிம் குழுக்கள் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவிடம் கேட்டுக் கொண்டுள்ளன.

கனேடிய முஸ்லிம்களின் தேசிய குழு ஜனவரி 29 ஆம் திகதியை இஸ்லாமிய மதத்தை நினைவுகூரும் தேசிய நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு இஸ்லாமிய மதத்தை நினைவுகூரும் தேசிய நாளை அறிமுகப்படுத்துவதானது வெறுப்பு, மதவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு தொடர்பான பொதுக் கல்வியை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கியூபெக் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆறு முஸ்லிம் ஆண்கள் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காயமடைந்தனர்.

இந்த நாளை  அதிகாரபூர்வ நினைவுதினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg