Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் கடுமையான பனிப்பொழிவு: வீதிகளில் விபத்து

In
Updated: 10:52 GMT, Jan 6, 2018 | Published: 10:52 GMT, Jan 6, 2018 |
0 Comments
1137
This post was written by : Suganthini

சீனாவின் நான்ஜின்ங் நகர் வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், வழுக்கி விழுந்து காயமடைவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக, ஊடகமொன்று தெரவித்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ள நிலையில், வீதிகள் வழுக்கும் தன்மை உடையனவாக மாறியுள்ளன.

புத்தாண்டு பிறந்த பின்னர் சீனாவின் 23 நகராட்சி, தன்னாட்சி பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்களில் பனிப்பொழிவுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், நான்கு மில்லியனுக்கும் அதிகமான சதுர கிலோமீற்றர் பகுதியை பனி மூடியுள்ளது.
இதில், ஜியான்சு மாகாணத்தின் நான்ஜின்ங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

வழுக்கி விழுந்து காயமடைந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 709 முறைப்பாடுகளை கடந்த இரண்டு நாட்களில்  கிடைத்துள்ளன. 227 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவை வழக்கமாக ஏற்படும் பனிச்சறுக்கு விபத்துகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது பனிப்பொழிவு நின்றுள்ளதால், அவற்றை துப்புரவு செய்யும் பணிகளை நகர சுத்திகரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg