Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம்: 6 அரபு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடத் தீர்மானம்

In உலகம்
Published: 11:10 GMT, Jan 6, 2018 |
0 Comments
1202
icon_com
This post was written by : Suganthini

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய தீர்மானத்தால் எழுந்துள்ள குழப்ப நிலைமை தொடர்பாக 6 அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் எகிப்து, சவுதி அரேபியா, மொரோக்கோ, ஐக்கிய அரபு ராச்சியம், ஜோர்டான், பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஜோர்டானில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடியுள்ளனர்.

புனித நகரான ஜெருசலேமை, இஸ்ரேலானது தமது நாட்டின் தலைநகரமென்றும் பலஸ்தீனமானது கிழக்கு ஜெருசலேம் தமது நாட்டின் தலைநகரமென்றும் கூறிவரும் நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி அங்கீகரித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய தீர்மானத்தால், அரபு நாடுகளில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச நாடுகளும் ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் 6 அரபு நாடுகளின் தலைவர்கள் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக கலந்துரையாட முன்வந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)