Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘குலேபகாவலி’ திரைப்பட விநியோக பணிகள் ஆரம்பம்!

In சினிமா
Published: 11:49 GMT, Jan 6, 2018 |
0 Comments
1083
icon_com
This post was written by : Surenth
Gulepakaavali

பிரபுதேவா, ஹன்சிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ திரைப்பட விநியோக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை விநியோக உரிமையை எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டு விநியோக உரிமையை சி.எஸ்.பதம்சந்தும், மதுரை விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், சேலம் விநியோக உரிமையை 7ஜி சிவாவும் பெற்றுள்ளனர்.

அத்துடன் திருநெல்வேலி, கன்னியாகுமரி விநியோக உரிமையை மணிகண்டனும், திருச்சி, தஞ்சாவூர் விநியோக உரிமையை காமதேனு பிக்சர்ஸ் நிறுவனமும் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களிலும் பெரிய விநியோக நிறுவனங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா, ரேவதி, ஆனந்தராஜ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, அம்பானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விவேக் – மெர்வின் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)