Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோவாவில் இரகசியமாக புத்தாண்டைக் கொண்டாடிய நடிகைகள்

In சினிமா
Updated: 12:10 GMT, Jan 6, 2018 | Published: 12:10 GMT, Jan 6, 2018 |
0 Comments
1180
This post was written by : Varothayan

நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், ராசி கண்ணா, லாவண்யா திரிபாதி மூவரும் இரகசியமாக கோவா சென்று புத்தாண்டைக் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கள் படங்களைக் கூட அவர்கள் ‘ருவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிராமல் இரகசியம் காத்துவருகின்றனராம்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் வருண்ராஜ் இணையத்தளத்தில் 4 புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார். அதில் 3 பெண்கள் நீச்சல் உடையில் இருப்பதுபோல் உள்ளது. மூவரும் முதுகை காட்டிக்கொண்டு சூரிய உதயத்தை பார்த்தபடி இருக்கிறார்கள். அருகில் ஒரு ஆணும் நிற்கிறார்.

இதை பார்த்த இணையவாசிகள் அந்த பெண்கள் வேறுயாருமல்ல நடிகைகள் ரகுல் ப்ரீத், ராசி கண்ணா, லாவண்யா எனவும் அவர்கள் அருகில் நிற்கும் ஆண் வருண்ராஜ் எனவும் கருத்து வெளியிடுகின்றனர்.

இவர்கள் நான்கு பேரும் நெருக்கமான நட்புடன் பழகி வருகின்றனர். சமீபத்தில் கூட இதே கூட்டணி மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழுவாகச் சுற்றி பொழுதை கழித்திருக்கிறார்களாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg