Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவு: மணிவண்ணன்

In இலங்கை
Updated: 12:50 GMT, Jan 6, 2018 | Published: 12:50 GMT, Jan 6, 2018 |
0 Comments
1207
This post was written by : Ravivarman

முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவளிக்கும் என தமிழ் தேசியப் பேரவையின் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசிய பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு நாம் தடையாகவிருக்கமாட்டோம். அவர்களுக்கு மாநகர சபைக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சகல உதவிகளையும் வழங்குவோம். ஆனால் முஸ்லிம் மக்களின் குடியேற்றத்துக்கு அனுமதியளிக்க முடியாது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் காணிகளே பொரும்பாலானவை உள்ளன. எனவே முஸ்லிம் மக்களின் குடியேற்றத்தை அனுமதிக்கும் அதிகாரம் உள்ளது.

தமிழ் தேசியப் பேரவை இன மத வேறுபாடியின்றியே யாழ்ப்பாண மாநகர சபை ஆட்சியை முன்னெடுக்கும். அனைவரினது உரித்துக்களும் கவனத்திலெடுத்தே அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள் மேம்படுத்தப்படும்’ என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg