Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரியின் திருமணம்: வின்ஸ்டர் நகரில் பிச்சைக்குத் தடை விதிக்க பணிப்பு

In
Updated: 12:37 GMT, Jan 6, 2018 | Published: 12:37 GMT, Jan 6, 2018 |
0 Comments
1212
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண நிகழ்வையிட்டு, வின்ஸ்டர் நகரில் பிச்சை எடுப்பதற்குத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு, வின்ஸ்டர் மற்றும் மெய்டன்ஹெட் (Maidenhead) கவுன்ஸில் பெருநகரத்தின் கொன்சர்வேட்டிவ் தலைவர் சைமன் டட்லி பணித்துள்ளார்.

இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான அவரது காதலியான மேகன் மாக்கிலுக்கும் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண நிகழ்வைக் கண்டுகளிக்க ஆயிரக்கானோர் வின்ஸ்டர் நகரில் ஒன்றுகூடுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வின்ஸ்டர் நகரில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்குமாறு சைமன் டட்லி பணித்துள்ளார்.

இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் வீடற்றவர்களின் பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg