Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திறைசேரி முறிகள் தொடர்பாக அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல்!

In இலங்கை
Published: 15:30 GMT, Jan 6, 2018 |
0 Comments
1109
icon_com
This post was written by : Ravivarman

திறைசேரி முறிகள் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவது குறித்து அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன், இதில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டதும் நிதிச்சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான உள்ளுர் அல்லது வெளிநாட்டு பொறிமுறையொன்றை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம்ஆண்டு வரை இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதால் இலங்கை மத்திய வங்கியின் அந்தக் காலப்பகுதிக்குரிய சகல ஆவணங்களையும் பாதுகாத்து வைப்பது பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர், சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)