Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுஜன முன்னணியில் போட்டியிடும் அபேட்சகர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பு!

In இலங்கை
Updated: 15:31 GMT, Jan 6, 2018 | Published: 15:31 GMT, Jan 6, 2018 |
0 Comments
1206
This post was written by : Ravivarman

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச சபையில் பொதுஜன முன்னணியில் போட்டியிடும் நான்கு அபேட்சகர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

எம்.ஜே.ரவூப், அமீர் அலி பாயிஸ், எம்.என்.சப்ராஸ், எஸ்.ஏ.ஜெம்ரூல் ஆகியோரே ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இன்று (சனிக்கிழமை) இணைந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேநேரம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 22,000 வாக்குகளை பெற்றுக்கொண்ட அபேட்சகரான ஏ.எல்.எஸ்.லெப்பை மற்றும் இறக்காமம் பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எச்.எல்.ஏ.எம்.சித்திக் ஆகியோர் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சிதிட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg