Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தல் அரசாங்கத்தினையோ அல்லது அமைச்சர்களையோ மாற்றும் தேர்தல் அல்ல: திகா

In இலங்கை
Published: 15:54 GMT, Jan 6, 2018 |
0 Comments
1090
This post was written by : Ravivarman

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலானது அரசாங்கத்தினையோ அல்லது அமைச்சர்களையோ மாற்றும் தேர்தல் அல்ல என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஐ.தே.க. வின் ‘யானை’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புளியாவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உள்ளுராட்சி மன்ற தேர்தலானது உங்களது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யும் தேர்தல் நாங்கள் அமைச்சரவையில் ஒதுக்கப்படுகின்ற நிதி பிரதேச சபை ஊடாகத்தான் எமது பிரதேசத்தினை வந்தடைகின்றன.

அதனை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இடத்தில் எமது பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அப்போது எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய முடியும்.

நாங்கள் இங்கு தெரிவு செய்திருப்பவர்கள் எவராக இருந்தாலும் நான் தான் தலைவராக இருக்க போகிறேன். 2015ஆம் ஆண்டு நீங்கள் எங்களை நம்பி வாக்களித்தனால் தான் மலையகத்தில் பல மாற்றங்களை செய்திருக்கின்றோம்.

எனவே என்னையும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்களையும் அமைச்சர் மனோ கணேசன் அவர்களையும் நம்பி வாக்களியுங்கள். உங்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை நாம் செய்வோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg