Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லாமே பொய் நாடகம்: கெஹலிய ரம்புக்வெல்ல சாடல்

In இலங்கை
Published: 02:27 GMT, Jan 7, 2018 |
0 Comments
1128
This post was written by : Anojkiyan
Keheliya Rambukwella

மத்திய வங்கி பினைமுறி விவகாரத்தில் அனைத்து விடயங்களும் பொய் நாடகமே என கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மத்திய வங்கி பினைமுறி விவகாரத்தில் அனைத்து விடயங்களும் பொய் நாடகமாகவே காணப்படுகின்றன. இதில் தவறிழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுப்பபதற்கான முயற்சிகள் நேர்மையான முறையில் இடம்பெறுவதாக தெரியவில்லை. மாறாக சம்பந்தப்பட்டோரை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே இது தொடர்பான செயற்பாடுகள் அவ்வாறே காணப்படுகின்றன. ஆரம்பத்தில் 2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜையொருவரை நியமிக்க பிரதமர் முற்பட்டபோது அமைச்சரவை அதனை எதிர்த்துள்ளது. எனினும் தான் அதனை பொறுப்பேற்ப்பதாக கூறி அந்த நியமணம் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் இவ்வளவு பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது. ஆனால் தற்போது நடைபெறும் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான பொய் நாடகமே இடம்பெறுவதாக எமக்கு தோன்றுகின்றது” என கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடந்த 31ஆம் திகதி கையளித்தது. அந்த அறிக்கையை வாசித்து முடிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது தொடர்பான தனது நிலைப்பாட்டை கடந்த புதன்கிழமை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)