Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளாதீர்கள்: தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

In இலங்கை
Updated: 06:27 GMT, Jan 7, 2018 | Published: 02:55 GMT, Jan 7, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

பெண் வேட்பாளர்களை அச்சுறுத்த முயற்சித்து, தமது அரசியல் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ள வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய எச்சரித்துள்ளார்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பெண் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கிழக்கு மாகாணத்தில், புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் புத்தளத்தில், பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பகிரங்கமாக ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்ததாகவும் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் ஆராய இரண்டு தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையாளர், பெண் வேட்பாளர்கள் சுதந்திரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் திணைக்களம் எவ்வித தயக்கமும் காட்டாது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg