Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வில்பத்து – பூக்குளம் பிரதேசத்தில் யானைகள் கொலை செய்யப்படவில்லை!

In இலங்கை
Updated: 03:55 GMT, Jan 7, 2018 | Published: 03:55 GMT, Jan 7, 2018 |
0 Comments
1158
This post was written by : Anojkiyan

வில்பத்து – பூக்குளம் பிரதேசத்தில் யானைகள் கொலை செய்யப்படவில்லை என வனஜீவராசிகள் வளத்துரை அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கல்லாறு யானையின் உடல் எச்சங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த யானை மரணமடைந்த பின்னரே அதன் தந்தங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காட்டு யானைகள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு ஏதுவான வகையில் வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg