Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி மோசடி தொடர்பிலான ஆணைக்குழு மிகவும் நேர்மையான முறையில் செயற்பட்டுள்ளது: சரத்

In இலங்கை
Updated: 04:17 GMT, Jan 7, 2018 | Published: 04:17 GMT, Jan 7, 2018 |
0 Comments
1118
This post was written by : Anojkiyan

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஆணைக்குழு மிகவும் நேர்மையான முறையில் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“முறி மோசடி தொடர்பிலான ஆணைக்குழு மிகவும் நேர்மையான முறையில் செயற்பட்டதாக அனைவராலும் நம்பப்படுகின்றது.

அத்துடன், அண்மைய காலத்தில் நியமிக்கப்பட்ட மிகவும் சிறந்த ஆணைக்குழுவாக அதை கருதுகிறேன். இதேவேளை, எதிர்க்காலத்தில் புதிதாக அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது” என கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 31ஆம் திகதி கையளித்தது. இந்நிலையில் இதுகுறித்து பலரும் காரசாரமாக விமர்சித்து வருவதோடு, தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg