Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்!

In கிாிக்கட்
Published: 04:11 GMT, Jan 7, 2018 |
0 Comments
1188
This post was written by : Puvanes
chennai001

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கல் ஹஸி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சூதாட்ட விவகாரம் காரணமாக கடந்த 2 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்த சுப்பர் கிங்ஸ் மீண்டும் இந்தவருடம் நடக்கவுள்ள ஐ.பி.எல் தொடரில் மீண்டும் களமிறங்குகின்றது.

மீள்பிரவேசம் செய்துள்ள சென்னை அணியில் தோனி, சுரேஸ் ரெய்னா, ஜடேஜா ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹஸி அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஹஸி கருத்து தெரிவிக்கும் போது, “ஏற்கனவே சென்னை அணியின் வீரராக மறக்கமுடியாத பல நினைவுகள் உள்ளது மட்டுமல்லாமல் சென்னை அணியில் பல நண்பர்கள் உள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது எனவும் ஹஸி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)