Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமைக்கு மோடியே காரணம்: ராகுல் காந்தி

In இந்தியா
Published: 04:16 GMT, Jan 7, 2018 |
0 Comments
1076
This post was written by : Anojkiyan
rahul

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து போனதற்கு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரே காரணம் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் (2017-2018) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அதிகாரி ஆனந்த் நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (ஞாயிற்றுக் கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் புதிய முதலீடுகள் குறைந்து போய்விட்டது. வங்கிகள் கடன் அளிக்கும் வளர்ச்சி கடந்த 63 வருடங்களில் இல்லாத வகையில் வெகுவாக குறைந்துள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

வேளாண் உற்பத்தியின் கூட்டு மதிப்பு 1.7 சதவீதத்துக்கு குறைந்துவிட்டது. இது தவிர நிதிப் பற்றாக்குறை கடந்த 8 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்து உள்ளது. அதேபோல் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் முடங்கிப்போய் உள்ளன. ஒட்டு மொத்தத்தில் இப்படி இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதற்கு பிரதமர் மோடியும், மேதாவியான நிதி மந்திரி அருண்ஜெட்லியும் இணைந்து நாட்டில் ஒட்டுமொத்த பிளவு அரசியலை ஏற்படுத்தியதுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg