Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக தமிழர்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Updated: 09:55 GMT, Jan 7, 2018 | Published: 04:37 GMT, Jan 7, 2018 |
0 Comments
1337
This post was written by : Anojkiyan

உலகத் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற உலக தமிழர் திருநாள் மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எங்களுடைய நாட்டில் 30 வருட கால யுத்தம் நிறைவடைந்து தற்பொழுது மிகவும் அமைதியான ஒரு நாடாக அது இருக்கின்றது. எனவே உலகின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்திருக்கின்ற தமிழர்களிடம் நான் விடுக்கின்ற வேண்டுகோள் நீங்கள் எல்லோரும் எங்களுடைய இலங்கை நாட்டில் வந்து உங்களுடைய முதலீடுகளை அங்கே செய்ய வேண்டும். செய்கின்ற பொழுது தமிழர்களுடைய வாழ்வும் பொருளாதாரமும் இன்னும் சிறப்பாக இருக்கும். எங்களுடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒரு உந்து சக்தியாக செயற்பட வேண்டும். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்கு எங்களுடைய அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இலங்கை தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற பொழுது முதலில் குரல் கொடுப்பவர்களாக தமிழக மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்கின்றது. அதனை நான் வரவேற்கின்றேன். அதே போல எங்களுடைய அனைத்து தேவைகளிலும் இந்திய அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகின்றது. இந்த உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக எங்களுடைய இலங்கையில் இருக்கின்ற தமிழ் குழந்தைகளின் கல்விக்கு உதவிகளை செய்ய முடியுமாக இருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்” என கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா¸ மலேசிய நாட்டின் துணை கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன், நடிகர் ராதாரவி, உலக புகழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்¸ மலேசிய நாட்டின் நாடாளுமன்ற அங்கத்தினர்களான ரவி¸மணிவண்ணன் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

2.o.jpeg - Copy (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg