Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியத் தொடரில் இருந்து தென்னாபிரிக்கா வீரர் விலகல்!

In கிாிக்கட்
Updated: 04:34 GMT, Jan 7, 2018 | Published: 04:34 GMT, Jan 7, 2018 |
0 Comments
1956
This post was written by : Puvanes

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாபிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்க சுற்றுப்பணயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்கள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று ரி20 போட்டிகளில் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

அதன்படி நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டெயின் குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியின் இடைநடுவில் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

தொடர்ந்து ஸ்டெயினுக்கு குதிகாலில் ஏற்பட்ட தசைக்காயம் காரணமாக அடுத்த இன்னிங்சில் பந்து வீசமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்டெயின் ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டதால் இந்தியாவிற்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதேவேளை, குறித்த போட்டியின் போது அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஸ்டெயின் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சாளரின் ஓய்வு அந்த அணிக்கு பலவீனமானதோர் விடயம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg