Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்ட விரோதமாக புகையிலைத் தூள் கடத்தியவர் கைது!

In இலங்கை
Published: 05:00 GMT, Jan 7, 2018 |
0 Comments
1037
icon_com
This post was written by : Anojkiyan
arrest (1)

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புகையிலைத் தூள் பக்கற்றுகளை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த ஒருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) பகல் 2.30 மணியளவில், இலங்கை வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயணப் பொதியை சோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள், சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புகையிலைத் தூள் 120 பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளனர்.

இதனைதொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சென்னையில் இருந்து நாட்டிற்குள் வருகை தந்த ஒருவரிடம் பயணப் பொதியில் இருந்து 38 இலட்சத்து 78 ஆயிரத்து 820 ரூபாய் பெறுமதியான 25 ஆயிரம் அமெரிக்கா டொலர்கள் கைப்பற்றப்பட்டது.

2.o.jpeg - Copy (2) - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)