Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாகும் வரை மத்திய அரசிற்கு அடிபணிய மாட்டேன்: லாலு

In இந்தியா
Updated: 07:43 GMT, Jan 7, 2018 | Published: 05:02 GMT, Jan 7, 2018 |
0 Comments
1174
This post was written by : Kemasiya

மத்திய அரசுக்கு அடிபணிந்து செயற்படுவதை விட சமூக நீதிக்காக என்னை நான் குறிவைத்து சாவேன் என லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

லாலுபிரசாத்தின் அலுவலகம்  நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டிருந்த டுவிட்டர் பதிவிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களைப் பின்பற்றி வாருங்கள் இல்லை உங்களை குறிவைப்போம் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு அடிபணிந்து வாழ்வதை விட, சமூக நீதிக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் என்னை நான் குறிவைத்து மகிழ்ச்சியாக சாவேன்” என்று அவர் கூறியுள்ளதாக டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தீவன ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலுபிரசாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கான தண்டணை 3½ வருட சிறைத்தண்டனை என அறிவிக்கப்பட்டு அவரின் சிறைவாசம் உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்த அவரின் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg