Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செனிகலில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழப்பு

In
Updated: 04:52 GMT, Jan 7, 2018 | Published: 04:52 GMT, Jan 7, 2018 |
0 Comments
1169
This post was written by : Suganthini

மேற்கு ஆபிரிக்கக் குடியரசு நாடான செனிகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தில்; 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முறுகல் நிலைமை காணப்படும் காஸமன்ஸ் (Casamance) பகுதியிலுள்ள காட்டில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் நேற்று (சனிக்கிழமை) துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தை நடத்தியுள்ளார். இதன்போது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லையென்பதுடன், இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

செனிகலில் கடந்த 3 தசாப்தங்களுக்கும் மேலாக பிரிவினைவாதக் கிளர்ச்சி நீடித்துவருகின்றது. இந்நிலையில், சுதந்திரத்தைக் கோரும் காசமன்ஸ பகுதியில் அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் முறுகல் நிலைமை இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg