Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!(2ஆம் இணைப்பு)

In இந்தியா
Published: 05:36 GMT, Jan 7, 2018 |
0 Comments
1187
This post was written by : Kemasiya
xcv bvvb

சென்னையில் இன்று இடம்பெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தமைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பிய வாழ்த்தினை வாசித்து, பொய் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட கனிமொழி ராஜா ஆகியோருக்கு நீதியான தீர்ப்பு கிடைத்துள்ளதாக கூறி அதற்கு பாராட்டுத் தெரிவித்து முதல் தீர்மானம் 2ஜி வழக்கின் வெற்றியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நேரில் சென்று  பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மற்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் ஆய்வினை தடுத்து நிறுத்த வேண்டும் என்பவை உட்பட ஓஹி புயல் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், சிறுபான்மை அரசின் தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் வேண்டும், முத்தலாக் குறித்த புதிய சட்டமூலத்தினால் இஸ்லாமியர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் தேசிய மருத்துவ ஆணைய சட்டமூலம் மற்றும் மோட்டார் வாகன திருத்த சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தின் நிதி நெருக்கடியை போக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும், உள்ளாட்சி வாக்கு மறுவரைபை செய்ததில் குளறுபடியுள்ளமை கண்டிக்கத்தக்கது, மார்ச் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஈரோட்டில் மாநாடு நடத்தவுள்ளமை, தமிழக அரசின் கடன் சுமை அதிகித்து வருவதால் நிதி நிலமையை சரி செய்தல் வேண்டும், ஆகிய 11 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை

தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் கூட்டம் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று இடம்பெற்றுவருகின்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ஆரம்பமாகிய இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் உட்பட பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில்,  இடம்பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வருடம்(2017) டிசெம்பரில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியடைந்திருந்தது.

இது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கூறிய ஸ்டாலின்,  தி.மு.க. எதிர்பார்த்த ஆர்.கே.நகர் வெற்றியை இழந்துள்ளது. எதிர்பாராத 2ஜீ வழக்கின் தீர்ப்பை வென்றுள்ளது என்றார்.

இந்நிலையில் 2ஜி வழக்கு தமது நிரபராதித்துவத்தை வெளிப்படுத்துவதால்,  அதனை பொதுக்கூட்டங்களில் மக்களிடம் எடுத்துரைத்து உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg