Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீர்த்தி சுரேஷ் மீது ராகுல் பிரீத் சிங் குற்றச்சாட்டு!

In சினிமா
Updated: 05:25 GMT, Jan 7, 2018 | Published: 05:13 GMT, Jan 7, 2018 |
0 Comments
1426
This post was written by : Surenth

நடிகை கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகைகளின் சந்தர்ப்பங்களை தட்டிப் பறிப்பதாக நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் பல முன்னணி நடிகைகளுக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் தவறிப்போயுள்ளதாக ராகுல் பிரீத் சிங் தனது அதிர்ப்பியை வெளியிட்டுள்ளார்.

ராகுல் பிரீத்சிங்க்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்க சென்றிருந்த நிலையில், மீண்டும் தமிழுக்கு வர முயற்சி செய்தார்.

இதன்பலனாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமாகியிருந்தார்.

இதனை தொடர்ந்து கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் நடித்தார். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படங்களில் ராகுல் பிரீத் சிங் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகிய பிறகு, அந்த வாய்ப்பு கை நழுவி போயுள்ளது. இந்த நிலையில், செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 36 திரைப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் பிரீத் சிங் என இருவரும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg