Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சவுதி இளவரசர்கள் கைது

In உலகம்
Updated: 05:21 GMT, Jan 7, 2018 | Published: 05:20 GMT, Jan 7, 2018 |
0 Comments
1167
This post was written by : Suganthini
arrest

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திலுள்ள மன்னர்  அரண்மனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், 11 இளவரசர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சவுதியில் இந்த வருடம் வற்வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதுவரைகாலமும் அரச குடும்பத்தினருக்காக அரசாங்கம்  செலுத்திவந்த தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தமக்கான தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த இளவரசர்கள் மன்னர் அரண்மனைக்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதி மற்றும் ஒழுங்குக்கு இடையூறு விளைவித்த  குற்றச்சாட்டின் பேரில் 11 இளவரசர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக, சர்வதே ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி இளவரசர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான செய்தி சவுதியிலுள்ள இணையத்தளமொன்றில் வெளிவந்துள்ளது.  குறிப்பிடப்படாத குற்றத்துக்காக உறவினர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று இளவரசர்கள் கூறியதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறிருக்க, சவுதியில் ஊழல் குற்றச்சாட்டில் இளவரசர்களும், அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)