Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!

In இலங்கை
Updated: 07:47 GMT, Jan 7, 2018 | Published: 05:34 GMT, Jan 7, 2018 |
0 Comments
1214
This post was written by : Anojkiyan

தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) குறித்த கூட்டம் இடம் பெற்றது.

நகர சபையின் முன்னாள் உப தலைவரும், மன்னார் நகர சபை வேட்பாளருமான ஜேம்ஸ் ஜேசுகாதஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தின் போது, மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் இடம் பெற்றது.

குறித்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg