Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்: மக்கள் படும் இன்னல்!

In இந்தியா
Updated: 06:04 GMT, Jan 7, 2018 | Published: 06:04 GMT, Jan 7, 2018 |
0 Comments
1217
This post was written by : Kemasiya

சம்பள உயர்வை வலியுறுத்தி தமிழக அரச போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நான்காவது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில், 20வீதமான பேரூந்துகள் இயக்கப்படுவதாகவும் 80வீதம் பேரூந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 20சதவீத பேரூந்துகளும் அதிகளவில் தனியார் பேரூந்துகளாகவே காணப்படுகிறது. இன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிலுக்கு செல்பவர்கள் மற்றும் பாடசாலை கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு விடுமுறை என்பதாலும் பேரூந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது.

அத்துடன் நாளை வார ஆரம்பத்தில் மீண்டும் மக்கள் கூட்டம் தமது பணிகளுக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளதால், பேரூந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வியின் பதிலை நோக்கி தமிழக மக்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg