Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களை நன்கு வாழவைக்க வேண்டும்: ரஜினியின் ஆசை

In சினிமா
Updated: 12:55 GMT, Jan 7, 2018 | Published: 07:29 GMT, Jan 7, 2018 |
0 Comments
1074
This post was written by : Anojkiyan

தமிழ் மக்களை நன்கு வாழவைக்க வேண்டும் என்பதே தனது அதிகபட்ச ஆசை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழா தொடங்குவதற்கு முன்னர் ரஜினி, கமல் ஆகியோர் உரையாற்றினர்.

இதன்போது ரஜினி பேசுகையில்:

என்னை வாழ வைத்த தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நடிகனாக வந்து மக்களை மகிழ்வித்து நடிகனாகவே சென்று விட கூடாது என விரும்புகிறேன்.

எனது 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த வரை படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி இருக்கிறேன் என்றார்.

இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg