Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உளநலம் பற்றிய சந்தேகம் பொய்: ட்ரம்ப் விளக்கமளிப்பு

In
Updated: 07:57 GMT, Jan 7, 2018 | Published: 05:56 GMT, Jan 7, 2018 |
0 Comments
1119
This post was written by : Suganthini
trump

அமெரிக்காவில் வெளிவந்துள்ள புதிய நூலொன்றில், தன்னுடைய உளநலம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்த சந்தேகம் பொய்யானதென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இந்த நூலில் காணப்படும் சர்ச்சைக்குரிய மேற்படி விடயம் தொடர்பாக, ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (சனிக்கிழமை) விளக்கமளித்தபோதே, அவர் நிராகரித்துள்ளார்.

தன்னைப் பற்றி அந்த நூலில் கற்பனையான முறையில்  எழுதப்பட்டுள்ளதுடன், அந்நூல் ஆசிரியர் மோசடியானவர் எனவும் ட்ரம்ப் சாடியுள்ளார்.

எழுத்தாளரான மைக்கேல் வோல்ஃப் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள “ஃபைர் அன்ட் ஃப்யூரி” எனும் நூலில், ட்ரம்ப்பின் உளநலம் பற்றிய சர்ச்சை காணப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதற்கு ட்ரம்ப் தகுதியானவரா என்ற சர்ச்சையை அந்த நூல் கிளப்பியுள்ளது.

இதேவேளை, ‘உறுதியான மனம் படைத்த நான்  மேதாவி என்பதுடன், எனது வாழ்நாளில் மிகப்பெரிய சொத்துகளாக இருப்பவை மன உறுதியும் புத்திசாலித்தனமுமே.  குறுகிய மனப்பான்மை கொண்ட ஹிலரி கிளிண்டனும் இந்த வாதத்தைப் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால், அவர் பொசுங்கிப் போனமை அனைவருக்கும் தெரியும். நான் சிறந்த வர்த்தகராக இருந்து தொலைக்காட்சி நட்சத்திரமாக உயர்ந்தேன்’ எனவும் ட்ரம்ப் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)