Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதுவும் கடந்து போகும்! – அப்போது ஜாம்பவான்கள் ஆனால் இப்போது?

In கிாிக்கட்
Updated: 06:16 GMT, Jan 7, 2018 | Published: 06:09 GMT, Jan 7, 2018 |
0 Comments
1836
This post was written by : Puvanes

11ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் தெரிவு மற்றும் சிறந்த வீரர்களை அணியில் தக்கவைக்கும் விடயங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாலும், 2 வருடங்களின் பின்னர் மீண்டும் சென்னை அணி களமிறங்குவதாலும் எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் ஐ.பி.எல், ரி20 எனும் போட்டிகள் என்றாலே அதிரடிக்கு கண்முன்வந்துபோவது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ்கெயில், எனினும் எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்காக தற்போது வரையிலும் இவர் எந்த அணியிலும் தக்கவைத்துக்கொள்ளப்படவில்லை.

கடந்தகாலத்தில் பெங்களூர் அணிக்காக ஆடிய இவர் 91 போட்டிகளில் 3420 ஓட்டங்களை குவித்தவர் என்பதோடு, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அதிக ஓட்டங்களைக் குவித்ததற்காக ஓரஞ்ச் தொப்பியினையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஐ.பி.எல் போட்டிகளில் 5 சதங்கள், ஆட்டமிழக்காது 175 ஓட்டங்கள், 263 ஆறு ஓட்டங்கள் என மைதானத்தை ஆட்டம் காட்டிய அதிரடிவீரர் கெயில் என்பது அனைவரும் அறிந்தது.

எனினும் கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் திணறிய கெயில், தற்போது மீண்டும் பழைய அதிரடிகளைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். எனினும் இதுவரை அவரை எந்த அணியும் தக்கவைக்காத நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அல்லது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகளில் எதற்காக ஆடப்போகின்றார் என்பது தெரியவில்லை.

அதேபோன்று கொல்கத்தா அணிக்காக விளையாடி சிறப்பான தலைவராக செயற்பட்டு, இருமுறை சம்பியன் பட்டத்தையும் அந்த அணிக்கு வென்று கொடுத்த கௌதம் கம்பீரையும் எந்த அணியும் தக்க வைத்துக்கொள்ளவில்லை.

ஏற்கனவே டெல்லி அணியில் விளையாடி அதன்பின் கொல்கத்தா அணிக்காக கம்பீர் விளையாடியதால் இவற்றில் எந்த அணிக்காக அவர் இம்முறை களமிறங்குவார் என்பதும் இதுவரை கேள்விக்குறியே.

கம்பீர் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான தலைவராக கருதப்படுபவர் என்பதோடு 131 போட்டிகளில் 3634 ஓட்டங்களையும், 31 தடவைகள் அரைச்சதங்களையும் கடந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டு ஓரிரு போட்டிகளில் சொதப்பிய பல வீரர்களுக்கும் இதேநிலையே ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயிலும் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.பி.எல் ஏலத்தின் பின்னரே முழுவிபரம் தெரியவரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg