Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெகன்பூரில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 06:43 GMT, Jan 7, 2018 | Published: 06:43 GMT, Jan 7, 2018 |
0 Comments
1239
This post was written by : Kemasiya

தெகன்பூரில் (Tekanpur ) உள்ள பொலிஸ் பயிற்சி பல்கலைக்கழகத்தில் (BSF Academy)  இடம்பெறவுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் வருடாந்த மாநாடு ஒன்றில் பிரதர் மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே, IGPS (Intelligent Global Pooling Systems) மற்றும் DGPS (Differential Global Positioning System)  எனப்படும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் நாட்டில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும், பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப விருத்திகள் குறித்து பிரதமர் மோடியினால் அறிவுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2017) இடம்பெற்ற இம்மாநாட்டில் எல்லைப்பிரச்சினை மற்றும் தீவிரவாதத்தை சமாளிப்பது குறித்தும் பொலிஸ்படைக்கு தேவையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

cvb

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg