Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே காரணம்: சிறிநேசன்

In இலங்கை
Updated: 07:46 GMT, Jan 7, 2018 | Published: 06:24 GMT, Jan 7, 2018 |
0 Comments
1104
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy (2) - Copy

இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாமல் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு சின்னஊறணி நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி சத்தியசீலனின் தேர்தல் செயற்பாடுகளுக்காக நேற்று (சனிக்கிழமை) மாலை தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதநதிரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன இதுவரை காலமும் எமது பிரச்சனைகளை தீர்த்துவைக்கவில்லை. தீர்த்துவைப்பதாக கூறி இப்போது ஓரளவிற்கு செயற்பட்டு வருகின்றனர். தீர்த்துவைத்தால் தான் நாம் அவர்களை பற்றி சிந்திக்க முடியும். கடந்த கால்களில் பல்வேறு தவறுகளை செய்தவர்கள். இப்போது எங்களிடம் வாக்குகளை கேட்பதற்கு தகுதியற்றவர்களாவர். நாங்களும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கு தயாராக இல்லை.

தற்போது படகில் வாக்கு கேட்டுவருகின்றனர். எங்களுடைய மாவீரர்கள் கொள்கைக்காகவும் கோட்பாட்டிற்காகவும் போராடியவர்களாவர். அவர்கள் இன்று பலவீனப்படுத்தப்படுவதற்கும் காட்டிக்கொடுக்கப்படுவதற்கும் வேட்டையாடப்படுவதற்கும் யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கும் காரணம் யார் என்பது உங்களுக்கே தெரியும்.

இப்போது மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்களுடைய சமாதிகள் சப்பாத்துக்கால்களினால் இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் இப்படியானவர்கள் தான். இப்படியான போக்குடையவர்கள் எப்படி எங்களிடமிருந்து வாக்குகளை கேட்க முடியும்?

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், பசில் ராஜபக்ஷ பொருளாதார அமைச்சராகவும் கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பிள்ளையான் முதலமைச்சராகவும் இருந்த காலம் தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பொற்காலமாக இருந்தது.

இன்றைய நிலையில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பசில் ராஜபக்ஷ பொருளாதார குற்றவாளியாகவும் கோத்தபாய ராஜபக்ஷ பொருளாதார குற்றவாளியாகவும் மனித உரிமை மீறல் குற்றவாளியாகவும் விசாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். மற்றவர் சிறையிலிருக்கின்றார்.

கஜேந்திரகுமார் பொன்னமபலம் அவர்களும், சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் இணைந்துதான் போட்டியிடுவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் இணைந்தால் யார் தலைமைப் பதவி வகிப்பதென அவர்களுக்குள் ஒரு போட்டி உருவாகிவிட்டது. இப்போதிருக்கின்ற கூட்டு என்பது தலைமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றார்கள்.

இன்று எங்களுடன் எந்த துரோகமும் செய்யாத ஜனநாயக போராளிக்கட்சி இணைந்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி எங்களுடன் இருந்து விலகிச்சென்றாலும் அதனைவிட பெறுமதியான கட்சி எங்களுடன் இணைந்துள்ளது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)