Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியாவில் குடியேற்றவாசிகளின் படகு மூழ்கியதில் 8 பேர் உயிரிழப்பு

In
Updated: 06:19 GMT, Jan 7, 2018 | Published: 06:19 GMT, Jan 7, 2018 |
0 Comments
1212
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் றப்பர் படகொன்று, லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் மூழ்கியதில் பெண்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக, இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இப்படகில் பயணித்த 12க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவின் தலைநகரான திரிபோலியிலிரு;நது 100க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகு நேற்று (சனிக்கிழமை) திடீரென்று நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், இப்படகில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, இப்படகில் பயணித்த 84 பேரைக் காப்பாற்றியுள்ளதாகவும், இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் கூறியுள்ளனர்.

இவ்வாறிருக்க, கடந்த 2017ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்தவர்களில், சுமார் 3 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg