கட்டார் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் பட்டம் வென்றார்!

கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் கெயில் மோன்பில்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற குறித்த போட்டியில் கெயில், ரஷ்ய வீரர் அண்ரே ருப்லெவ்வுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார்.
போட்டியில் ஆரம்பம் முதலாகவே கெயில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதன்படி 6-2 என முதற்செட்டினையும், 6-3 என இரண்டாம் செட்டினையும் எளிதாக கைப்பற்றி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ருப்லெவ்வை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
கெயில் ஏ.டி.பி உலக சம்பியன்ஹிப் போட்டிகளில் பெற்றுக்கொண்ட 7ஆவது சம்பியன் பட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை, இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரேசிலின் புருனோ சோரஸ், பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியை எதிர்கொண்ட குரோசியாவின் மேட் பவிக், ஆஸ்திரியாவின் ஒலிவர் மரச் ஜோடி 6-2, 7-6 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றது.