Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் அரசாங்கத்தை அமைப்பதில் திண்டாட்டம்: புதிய சுற்றுப் பேச்சு

In ஐரோப்பா
Updated: 06:46 GMT, Jan 7, 2018 | Published: 06:46 GMT, Jan 7, 2018 |
0 Comments
1108
This post was written by : Suganthini
germany

ஜேர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பமான நிலைமை காணப்பட்டுவரும் நிலையில், புதிய சுற்றுக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிபர் அங்கேலா மெர்கல் தொடங்கவுள்ளார்.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாமையால், அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பமான நிலைமை காணப்படுவதுடன், அந்நாட்டில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை ஜேர்மன் அதிபர் மெர்கல் இன்று தொடங்கவுள்ளதாகவும், இப்பேச்சுவார்த்தையில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (சி.டி.யூ.), கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சி (சி.எஸ்.யூ.) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.) ஆகிய கட்சிகள்  பங்கேற்கவுள்ளதாகவும், சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு இது இறுதிச் சந்தர்ப்பமென, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி போதியளவான பெரும்பான்மையைப் பெறவில்லை. இதன் காரணமாக, ஜேர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைக்க கூட்டணிக் கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், சி.டி.யூ/சி.எஸ்.யூ மற்றும் கிறீன்ஸ், எப்.டி.பி ஆகிய கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து எப்.டி.பி கட்சி விலகியதால், அரசியல் நெருக்கடியில் ஜேர்மனி சிக்கியுள்ளதுடன், அந்நாட்டில் இன்னமும் புதிய அரசாங்கமும் அமைக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)