Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரிய குடியேற்றவாசிகளை அழைக்கும் திட்டம் ஆரம்பம்

In உலகம்
Updated: 07:25 GMT, Jan 7, 2018 | Published: 07:25 GMT, Jan 7, 2018 |
0 Comments
1280
This post was written by : Suganthini

லிபியாவில் சிக்கியுள்ள நைஜீரிய நாட்டுக் குடியேற்றவாசிகளை, தமது நாட்டுக்குத் திரும்ப அழைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் ஜெப்ரி ஒனீயெமா (Geoffrey Onyema ) அறிவித்துள்ளார்.

திரிபோலிக்கு விஜயம் செய்துள்ள நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் ஒனீயெமா, நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, இதனைக் கூறியுள்ளார்.

லிபியாவில் சிக்கியுள்ள நைஜீரிய நாட்டுக் குடியேற்றவாசிகளை தமது நாட்டுக்குத் திரும்ப அழைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், இதற்காக 2 விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

சுமார் 5 ஆயிரத்து 500 குடியேற்றவாசிகள் திரும்புவார்ளென எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையை முன்வைத்து இத்தாலிக்குச் செல்ல முயன்ற நைஜீரியாவைச் சேர்ந்த அதிகளவான குடியேற்றவாசிகள், லிபியாவில் சிக்கியுள்ளனர். இவர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், மோசமான நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப விரும்பும் குடியேற்றவாசிகளுக்கு உதவும் நடவடிக்கையை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அண்மையில் தொடங்கியதுடன், இத்திட்டத்தில் நைஜீரியாவும் இணைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg