Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் இரட்டையர் பிரிவில் தோற்றார்!

In டெனிஸ்
Updated: 07:34 GMT, Jan 7, 2018 | Published: 07:34 GMT, Jan 7, 2018 |
0 Comments
1132
This post was written by : Puvanes

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் கில்லிஸ் சைமன் சம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) புனேவில் நடைபெற்ற குறித்த போட்டியில் கில்லிஸ் சைமன், தென்னாபிரிக்க வீரரான கெவின் எண்டர்சனுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார்.

விறுவிறுப்பாக நகர்ந்த போட்டியின் ஆரம்பம் முதலாக சைமன் அதிரடியைக்காட்டி முதல் செட்டினை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார், அடுத்த செட்டையும் 6-2 என்று கைப்பற்றிய சைமன், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வென்று பட்டத்தினை தன்வசப்படுத்திக் கொண்டார்.

இதேவேளை, குறித்த தொடரில் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் தெதர்லாந்தின் ரொபின் ஹாஸ், மெட்வே மிடெல்கூப் ஜோடியானது பிரான்சின் கில்லிஸ் சைமன், ஹியீஸ் ஹெர்பர்ட் ஜோடியை எதிர்கொண்டது.

ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற சைமன் இந்தப்போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது எனினும், சிறப்பாக செயற்பட்ட தெதர்லாந்து ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் சம்பியன்ஷிப் பட்டத்தினை தனதாக்கிக்கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg