Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக பேர்லினில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Published: 08:45 GMT, Jan 7, 2018 |
0 Comments
1122
This post was written by : Suganthini

ஈரானில் புதிய ஆட்சியை ஏற்படுத்தக் கோரி அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக, ஜேர்மன் தலைநகரான பேர்லினில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்ஸிலின் ஜேர்மன் பிரிவின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரான்டென்பேர்க் சதுக்கத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஈரானிய அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரானின் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்து, ஈரானில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையில் வன்முறை வெடித்ததில், 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg