Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு கூட்டமைப்பிற்குள்ளது: சிறிதரன்

In இலங்கை
Updated: 09:11 GMT, Jan 7, 2018 | Published: 09:11 GMT, Jan 7, 2018 |
0 Comments
1211
This post was written by : Ravivarman

தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பையும் கடமையையும் கொண்டிருக்கின்ற கட்சிதான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பாரதிபுரம் வட்டாரத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல தேர்தல்களிலும் தமிழ்த் தேசிய விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக ஆணையைத் தந்திருக்கின்றார்கள்.அதே ஆணையை இம்முறைத் தேர்தலிலும் மீண்டும் வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.

ஏனெனில் நாங்கள் ஒரு விடுதலை சார்ந்த இயக்கம். நாங்கள் யாருக்கும் சோரம் போக்கூடிய அல்லது விலை போகக்கூடிய கட்சியல்ல. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களினுடைய துயரங்களையும் அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளையும் பேணிப் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பையும் கடமையையும் கொண்டிருக்கின்ற கட்சிதான் தமிழ்தேசியக்கூட்டமைப்பு.

இவ்வாறான கட்சியினுடைய பயணம் என்பது பல காட்டிக்கொடுப்புகளுக்கும் கழுத்தறுப்புக்களுக்கும் துரோகங்களுக்கும் மத்தியிலேயே தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை இந்த கட்சி மேற்கொண்டிருந்தது.

இந்தக்கட்சியை மீண்டும் ஒரு முறை மக்கள் முன் கொண்டுவருவதற்கு அதன் தியாகங்களும் அற்பணிப்புக்களுமே காரணமாக அமைந்துள்ளன. எங்களுக்கு மக்கள் தந்திருக்கின்ற ஆணையினையும் செய்தியினையும் நாங்கள் தவறவிட்டால் அல்லது அதில் நாங்கள் நழுவிச்சென்றால் கூட நீங்கள் மட்டுமல்ல வரலாறுகள் கூட எங்களை மன்னிக்காது.

நாங்கள் இந்த அரசியல் பயணத்திலே நாங்கள் ஒரு கட்சியாக பயணிக்கின்றோம். நீங்கள் கட்சிக்காக வாக்களித்து வெற்றி பெறச்செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

வாக்கு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியில் ஒரு கட்சி என்ற அடிப்படையில் வெற்றி பெறச்செய்கின்ற உரிமை உங்களுக்கு இருக்கின்றது.

மக்கள் தந்த ஆணையைத் தவற விடாது சரியான பாதையில் எமது இனத்தின் விடுதலை நோக்கி இந்தக்கட்சி பயணிக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

05-01-2018 (6) 05-01-2018 (3) 05-01-2018 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg